19.2 C
Scarborough

ஒரு முழம் மல்லிப் பூவுக்காக நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் – ஆஸி. ஏர்போர்ட் சம்பவம்

Must read

ஆஸ்​திரேலிய விமான நிலை​யத்​தில் ஒரு முழம் மல்​லிகை பூவுக்​காக நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்டுள்​ளது.

ஆஸ்​திரேலி​யா​வின் விக்​டோரியா மாகாண மலை​யாளி​கள் கூட்​டமைப்பு சார்​பில் கடந்த 6-ம் தேதி மெல்​போர்ன் நகரில் ஓணம் பண்​டிகை கொண்​டாடப்​பட்​டது. இதில் கேரள நடிகை நவ்யா நாயர் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார்.

இவ்விழா​வில் பங்​கேற்​க ஆஸ்​திரேலி​யா​வின் மெல்​போர்ன் நகருக்கு நடிகை நவ்யா விமானத்​தில் சென்​றார். அப்​போது அவர் ஒரு முழம் மல்​லிகை பூவை கைப்​பை​யில் எடுத்​துச் சென்​றார். மெல்​போர்ன் விமான நிலை​யத்​தில் நடிகை நவ்​யா​வின் உடைமை​களை அந்த நாட்டு அதி​காரி​கள் சோதனை செய்​தனர். அப்​போது அவரது கைப்​பை​யில் ஒரு முழம் மல்​லிகை பூ இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதற்​காக அவருக்கு ரூ.1.14 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது.
இதுகுறித்து நவ்யா நாயர் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: எனது அப்​பா, இரண்டு முழம் மல்​லிகை பூவை வாங்​கி​னார். அந்த பூவை இரு துண்​டு​களாக வெட்டி என்​னிடம் தந்​தார்.

நான் கொச்​சி​யில் இருந்து சிங்​கப்​பூர் சென்று அங்​கிருந்து மெல்​போர்ன் சென்​றேன். எனவே சிங்​கப்​பூர் செல்​லும் வழி​யில் ஒரு முழம் பூவை சூடிக் கொண்​டேன்.
மெல்​போர்ன் விமான நிலை​யத்​தில் நடை​பெற்ற சோதனை​யின்​போது மல்​லிகை பூவை அதி​காரி​கள் கண்​டு​பிடித்​தனர். அந்த நாட்டு சட்ட விதி​களின்​படி மல்​லிகை பூவை கொண்டு செல்​வதற்கு தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது. எனவே எனக்கு ரூ.1.14 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது. இந்த தொகையை 28 நாட்​களுக்​குள் செலுத்த காலஅவ​காசம் வழங்​கப்​பட்டு இருக்​கிறது. இவ்​வாறு நடிகை நவ்வா நாயர் தெரி​வித்​துள்​ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article