15.7 C
Scarborough

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கும் ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்கலாம்: சுனில் கவாஸ்கர் யோசனை

Must read

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கும் ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி தொடரை 2-2 என்ற கணக்கில் சமனில் முடித்தது. மேலும் கடைசி மற்றும் 5-வது டெஸ்டில் சிறப்பாக விளையாடி போட்டியில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தத் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்ற ஷுப்மன் கில் முதல் தொடரிலேயே சாதித்து காட்டியுள்ளார். 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 754 ரன்கள் (10 இன்னிங்ஸ்) குவித்தார். இதில் நான்கு சதங்கள் அடங்கும்.

இந்நிலையில் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கும் ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்
கலாம் என்று முன்னாள் கேப்ட னும், கிரிக்கெட் போட்டி வர்ணனையாளருமான கவாஸ்கர் யோசனை தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறியதாவது: தற்போது முடிந்துள்ள இங்கிலாந்து தொடரில் மிக அற்புதமாக விளையாடினார் ஷுப்மன் கில். 4 அபாரமான சதங்களை விளாசியதே இதற்குச் சாட்சி.

எனவே, ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கேப்டனாக ஷுப்மன் கில்லை தேர்வு செய்ய தேர்வுக் குழுவினர் பரிசீலனை செய்யலாம். ரோஹித் சர்மா, விராட் கோலி ஒருநாள் போட்டியில் விளையாட தயாராக உள்ளனர். அவர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த விஷயங்கள் தேர்வுக் குழுவின் முடிவைப் பொறுத்தது.

ஆஸ்திரேலியா அல்லது மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வுக்குழு விரும்பினால் ஷுப்மன் கில்லை கேப்டனாக தேர்வு செய்யலாம் என்பது எனது யோசனை. அவரை கேப்டனாக தேர்வு செய்ய இதுவே சரியான நேரமாகும்.

ஷுப்மன் கில், அணியில் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராவார். பர்மிங்ஹாம் டெஸ்டில் அவர் குவித்த 269 ரன்கள் மிகவும் சிறப்பானவை. ஒவ்வொரு ரன்னும் முக்கியமானது என்பதை அவர் அந்த டெஸ்டில் உறுதிப்படுத்த விரும்பினார். இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article