ஏர் கனடா நிறுவனத்தில் பணியாற்றும் விமான பணியாளர்கள்களில் பெருமானளவிலானோர் புதிய ஒப்பந்த சலுகையை நிராகரித்துள்ளனர்,
99.1% பேர் புதிய ஒப்பந்த சலுகைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
தற்காலிக புதிய ஒப்பந்தத்தில் ஜூனியர் விமான பணியாளர்கள்களுக்கு 12% சம்பள உயர்வும், மூத்தவர்களுக்கு 8% சம்பள உயர்வும் சேர்க்கப்பட்டிருந்தாலும், அது போதுமானதல்ல என்று தொழிற்சங்கம் கருதுகிறது.
இந்நிலையில் ஊதிய பிரச்சினை மற்றுமொரு தரப்பின் மத்தியஸ்தத்தில் தீர்க்கப்படும் பெறும் என கூறப்படுகிறது.
இதேநேரம் வேலைநிறுத்தம் அல்லது கதவடைப்பு ஏற்படும் அபாயம் இல்லை, மேலும் விமானங்கள் வழக்கம் போல் இயங்கும் என கூறப்படுகிறது.
ஊதியங்களைத் தவிர, தற்காலிக ஒப்பந்தத்தின் பெரும்பாலான விதிமுறைகள் புதிய கூட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
10,000 க்கும் மேற்பட்ட விமான பணியாளர்கள் வாக்களிப்பில் பங்கேற்றனர் நிலையில் 99.4% பேர் தங்கள் வாக்களிப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.