7.8 C
Scarborough

ஒன்லைன் அச்சுறுத்தல் குறித்து தீவிர விசாரணை!

Must read

Liberal கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக விடுக்கப்பட்ட online அச்சுறுத்தல்கள் குறித்து Nova Scotia பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். Liberal கட்சியில் இணைவது தொடர்பிலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

முன்னாள் Conservative கட்சியைச் சேர்ந்த Chris d’Entremont, செவ்வாயன்று Liberal கட்சியில் இணைந்து கொள்ள களத்தில் இறங்கினார். Nova Scotia வின் RCMP செய்தித் தொடர்பாளர் Cindy Bayers இன் கூற்றுப்படி, D’Entremont இற்கு எதிரான அச்சுறுத்தல்கள் புதன்கிழமை Yarmouth கிராமப்புற RCMP க்கு தெரிவிக்கப்பட்டன. Online அச்சுறுத்தல்களின் தன்மை குறித்து கேட்டபோது, ​​விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மட்டுமே RCMP உறுதிப்படுத்தியது.

தனது அரசியல் பயணத்தில் தான் அதிகம் கேள்விப்பட்ட சிறந்த திட்டங்களை நிறைவேற்றும் ஒரு புதிய வரவுசெலவுத்திட்டத்தை பிரதமர் Mark Carney முன்மொழிந்துள்ளார், அதனடிப்படையில் வலுவான சமூக உள்கட்டமைப்பை உருவாக்கவும், திடமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பவுமே தான் அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாக D’Entremont கூறினார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் Liberal வேட்பாளரை விட 533 வாக்குகள் வித்தியாசத்தில் – 1.1 சதவீத குறுகிய வெற்றி வித்தியாசத்திலேயே D’Entremont தனது ஆசனத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article