கனடாவின் தெற்கு கியூபெக்கில், இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான நிலையில், அவற்றில் ஒரு காரில் புலம்பெயர்வோர் இருந்தது தெரியவந்தது.
ஞாயிற்றுக்கிழமையன்று, அதிகாலையில், தெற்கு கியூபெக்கில் கனடா அமெரிக்க எல்லையருகே இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
அவற்றில் ஒரு காரில் இரண்டு பேரும் மற்றொரு காரில் 10 பேரும் பயணித்துள்ளனர்.
அந்த 10 பேரும் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்வோர் என நம்பப்படுகிறது.
அவர்களில் நான்கு பேர் காயமடைந்த நிலையில், பொலிசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
விடயம் என்னவென்றால், அந்தக் காரிலிருந்த மற்ற ஆறு பேரும் தப்பியோடிவிட்டார்கள்.
ஹெலிகொப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் பொலிசார் அவர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதற்கிடையில், ட்ரம்ப் நிர்வாகம் ஏற்படுத்தும் கெடுபிடியால்தான் இப்படி மக்கள் சட்டவிரோதமாக தப்பி கனடாவுக்குள் நுழைவதாக தெரிவித்துள்ள உள்ளூர் மக்கள், அவர்களுடைய நிலைமை கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.