ஒன்றாரியோ மாகாணத்தில் நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் கட்சிக்கு கூடுதல் ஆதரவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி, ஆட்சி செய்து வருகின்றது.
முதல்வர் டாக் போர்ட் முன்கூட்டியே தேர்தலை அறிவித்திருந்தார்.
கட்சிகளுக்கான ஆதரவு தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கூடுதல் ஆதரவை காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
கட்சிக்கு 45 வீத மக்கள் ஆதரவும் லிபரல் கட்சிக்கு 29.5 வீதம் ஆதரவும் என்டிபி கட்சிக்கு 17.7 வீத ஆதரவும் பசுமை கட்சிக்கு 5.4வீதம் ஆதரவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சிக்கான ஆதரவு வலுவான நிலையில் காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.