கனடா ஒன்டாரியோவின் தெற்கு-மத்திய யார்க் பிராந்தியத்தில் ரிச்மண்ட் ஹில் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோண்ட விபத்தில் இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும் ரொரன்ரோவை வாழ்விடமாகவும் கொண்ட 65 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய நிலையில், வீதியால் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோண்டுள்ளது.
இந்த விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

