ஒன்றாரியோவில் நொபிள்டனில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 12 வயது சிறுவன் ஒருவர் ஓநாய் கடிக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
சிறுவன் காலில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யார்க் பிராந்திய காவல்துறை வழங்கிய தகவலின்படி, இந்த சம்பவம் ஹைவே 27 மற்றும் கிங் ரோடு சந்திப்பு அருகே மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ரோக்கோ மொற்ரா எனும் சிறுவன் தனது வீட்டின் முன் பாதையில் கைபேசியில் மூழ்கியபடி உட்கார்ந்திருந்தபோது, அருகே வந்த ஓநாய் அவனின் காலை கடித்ததாக அவரது தாயார் டெபோரா மொற்ரா கூறினார்.
அவன் வீட்டுக்குள் ஓடி வந்தபோது ‘அம்மா, ஓநாய் கடித்தது என சத்தமிட்டதாக அவனது தாயார் தெரிவித்துள்ளார்.
ஓநாய் கடித்த தினம் சிறுவன் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.