பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T20 தொடரின் புதிய பருவத்திற்கான போட்டிகள் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
BPL T20 தொடரின் புதிய பருவத்திற்கான (2026) போட்டிகள் இந்த ஆண்டின் டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டின் ஜனவரி மாத இடைவெளிகளில் ஒழுங்கு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
பங்களாதேஷின் புதிய பொதுத் தேர்தல்கள் 2026ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தேர்தலுக்கு மத்தியில் விடயங்களை சுமூகமாக கொண்டு செல்லும் நோக்குடனேயே BPL தொடரும் ஒத்தி வைக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது. அதன்படி ஒத்திவைக்கப்படும் குறிப்பிட்ட தொடர் 2026ஆம் ஆண்டின் மே மாதத்தில் நடைபெறும் என நம்பப்படுகின்றது.
அதேவேளை பங்களாதேஷ் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் BPL போட்டிகள் குறித்த முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் மஹ்பூப் அனாம் குறிப்பிட்டுள்ளார்.