15.4 C
Scarborough

ஐந்தாமிடத்துக்கு முன்னேறிய ஸ்டோக்ஸ்!

Must read

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் முன்னேறியுள்ளார்.

இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 53 ஓட்டங்களைப் பெற்றதோடு, ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையிலேயே எட்டாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் ஐந்து வீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. இரவீந்திர ஜடேஜா, 2. மெஹிடி ஹஸன் மிராஸ், 3. மார்கோ ஜன்சன், 4. பற் கமின்ஸ், 5. பென் ஸ்டோக்ஸ்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜஸ்பிரிட் பும்ரா, 2. ககிஸோ றபாடா, 3. பற் கமின்ஸ், 4. நொமன் அலி, 5. ஜொஷ் ஹேசில்வூட், 6. நேதன் லையன், 7. மார்கோ ஜன்சன், 8. மற் ஹென்றி, 9. மிற்செல் ஸ்டார்க், 10. ஜேடன் சியல்ஸ்.

இதேவேளை மேற்குறித்த போட்டியில் 252 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் றிஷப் பண்ட், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.

இதுதவிர இப்போட்டியில் 211 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் பென் டக்கெட், 13ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜோ றூட், 2. ஹரி ப்றூக், 3. கேன் வில்லியம்சன், 4. யஷஸ்வி ஜைஸ்வால், 5. ஸ்டீவ் ஸ்மித், 6. தெம்பா பவுமா, 7. றிஷப் பண்ட், 8. பென் டக்கெட், 9. கமிந்து மென்டிஸ், 10. செளட் ஷகீல்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article