ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி நேற்று புதன்கிழமை (10) அதிகாலை ஐக்கிய அரபு இராச்சியத்துக்குப் புறப்பட்டது.
இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியில் இருந்த குகதாஸ் மாதுலன் (Kugathas Mathulan), தனது வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியுடன் இணையவில்லை. அவர் சிகிச்சை பெற்று வருவது குறிப்படத்தக்கது.
இந்நிலையில், குகதாஸ் மாதுலனுக்கு பதிலாக வென்னப்புவை புனித ஜோசப் வாஸ் கல்லூரியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ஹிமால் ரவிஹன்ச (Himal Ravihansa) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

