14.6 C
Scarborough

ஏர் இந்திய விபத்து; பிரிட்டிசுக்கு தவறான எச்சங்கள் சென்றன

Must read

ஏர் இந்தியா 171 விபத்தில் பல பிரிட்டிஷ் குடும்பங்களுக்கு தவறான உடல் எச்சங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வநதுள்ளது.

லண்டனுக்குச் சென்ற AI 171 விமானம் ஜூன் 12 அன்று குஜராத்தின் அகமதாபாத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விபத்தில் உயிரிழந்த 260 பேரில் 52 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள். மரபணு சோதனை, மற்றும் பல் பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்ட அவர்களின் எச்சங்கள் ஐக்கிய இராச்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில் உடல்களை அடையாளம் காண்பதிலும் கொண்டு செல்வதிலும் தவறு நடந்ததாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பிரிட்டிஷ் நாட்டவர்களின் எச்சங்களை, அவர்களின் குடும்பத்தினர் வழங்கிய மாதிரிகளுடன் அவர்களின் டிஎன்ஏவை ஒப்பிட்டு சரிபார்க்க முயன்ற நிலையில் , இந்த பிழைகள் வெளிச்சத்திற்கு வந்தன என  இன்னர் வெஸ்ட் லண்டன் மரண விசாரணை அதிகாரி டொக்டர் பியோனா வில்காக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சு, இந்த விடயத்தை அவர்கள் அறிந்திருப்பதாகவும், “இந்த கவலைகள் மற்றும் பிரச்சினைகள் எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட தருணத்திலிருந்து இங்கிலாந்து தரப்புடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும்”

துயரமான விபத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுவப்பட்ட நெறிமுறைகள் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளின்படி பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டனர் எனவும் தெரிவித்துள்ளது.

அனைத்து மரண உடல்களும் மிகுந்த தொழில்முறையுடனும், இறந்தவரின் கண்ணியத்திற்கு உரிய மரியாதையுடனும் கையாளப்பட்டன.

இந்தப் பிரச்சினை தொடர்பான எந்தவொரு கவலைகளையும் நிவர்த்தி செய்வதில் நாங்கள் இங்கிலாந்து அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவோம் என மேலும் அறிவித்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article