13.8 C
Scarborough

ஏரியில் மூல்கிய தமிழ் இளைஞர் பலி!

Must read

இவ்வார தொடக்கத்தில் பென்கிரோப்ட் பகுதியில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பீடர்புரூகின் வட.கிழக்கே சுமார் 115 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெராடே ஏரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு படகு கவிழ்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய ஒன்றோரியோ மாகாணத்தின் பென்கிரோப்ட் பகுதி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவத்தின் போது படகுக்குள் இருந்த ஒருவர் காணாமல் போயிருந்தார். மேலும் இரண்டு ஆண்கள் பாதுகாப்பாக கரைக்கு வந்துவிட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவசர மீட்பு பணியின் தேடலின் பின்னர் நீருக்கடியில் ஓர் உடலைக் கண்டு பிடித்தனர் அது படகிலிருந்து காணாமல் போன மூன்றாவது இளைஞனின் சடலம் என உறுதிப்படுத்தினர். சம்பந்தப்பட்டவர் ஸ்கார்புரூக் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ராஜ்குமார் ரதூஷன் என்ற இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த நேரத்தில் அவர் உயிர் பாதுகாப்பு கவசம் அணிந்திருக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். தண்ணீர் மிகவும் குளிராக இருப்பதால் விழுந்தால் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் அதனால் நீரில் இருக்கும் போது எந்நேரமும் PFD அல்லது life jacket அணிந்திருக்குமாறு ஒன்ரோரியோ மாகாண பொலிஸ் வலியுறுத்தியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article