எல்லைப் பாதுகாப்பு குறித்த கலந்துரையாடலுக்காக கனேடிய அதிகாரிகள் புதன்கிழமை Washington இல் அமெரிக்க சட்டமா அதிபர் Pam Bondi ஐ சந்திக்கவுள்ளனர்.
நீதி அமைச்சர் Sean Fraser, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Gary Anandasangaree மற்றும் fentanyl czar Kevin Brosseau ஆகியோர் அமெரிக்க நீதித்துறையை சார்ந்த Bondi உடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களுடன் திறந்த உரையாடலைப் பேணுவதை நோக்கமாகக் கொண்ட ஓர் நேரடி சந்திப்பு என்று கனேடிய பிரதிநிதிகள் இச்சந்திப்பு குறித்து விவரித்துள்ளனர். எல்லைப் பாதுகாப்பு தொடர்பில் இலையுதிர்காலத்தில் முன்வைக்கத் திட்டமிட்டுள்ள குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் குறித்தும் கனேடியர்கள் இதன்போது பேசவுள்ளனர்.
Fentanyl மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பில் இரண்டு நிர்வாகங்களுக்கும் இடையே பல மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கனடாவுக்கு எதிரான தனது வரிகளை நியாயப்படுத்த Fentanyl போதைப் பொருளை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு வருகின்றார். மேலும் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு Fentanyl வருவதால் ஏற்பட்ட “பொது சுகாதார நெருக்கடி” என்று கூறி வெள்ளை மாளிகை அழைத்ததன் காரணமாக ஒரு தேசிய அவசரநிலையினையும் அறிவித்திருந்தார்.
July மாத இறுதியில் வெளியிடப்பட்ட ஒரு உண்மைத் தாளில் (fact sheet) கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் Fentanyl மற்றும் பிற சட்டவிரோத போதைப்பொருட்களின் தொடர்ச்சியான வெள்ளத்தை தடுக்க கனடா ஒத்துழைக்கத் தவறிவிட்டது என்று வெள்ளை மாளிகை கூறியது. இருப்பினும் அமெரிக்காவிற்குள் கடத்தப்படும் Fentanyl போதைப் பொருளில் பெரும்பகுதி மெக்சிகோவிலிருந்தே கடத்தப்படுகிறது.