8.7 C
Scarborough

எலான் மஸ்க்கின் அரசியல் பயணம் ஆரம்பம்: கட்சி பெயரும் அறிவிப்பு!

Must read

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை     நேரடியாக     எதிர்க்க துணிந்துள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், ‘தி அமெரிக்கா பார்ட்டி’ என்ற பெயரில் கட்சி துவங்க இருப்பதாக நேற்று அறிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி  டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க்.

கடந்த      ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலின் போது, டிரம்பின் குடியரசு கட்சிக்கு 2,500 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.

டிரம்ப் நிர்வாகம் தன் தொழில்களுக்கு சாதகமாக இருக்கும் என எண்ணிய நிலையில், சமீபத்தில் புதிய சட்ட சட்டமூலத்தை  டிரம்ப் அரசு கொண்டு வந்தது.

அதில் மின்சார வாகனங்களுக்கான வரிச்சலுகை ரத்து, அரசின் விண்வெளி நிறுவனமான நாசாவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் இருந்தன.

தன் தொழில்களை பாதிக்கும் இந்த சட்டமூலத்தை எலான் மஸ்க் கடுமையாக எதிர்த்தார். மேலும், டிரம்ப் அரசை நேரடியாக விமர்சிக்க துவங்கினார்.

பதிலுக்கு டிரம்பும், மஸ்க் நிறுவனத்துக்கான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு ஒப்பந்தங்கள், மானியங்களை நிறுத்துவேன் என மிரட்டல் விடுத்தார்.

அதன் பின், தன் சமூக வலைதள பக்கத்தில் ’80 சதவீத நடுநிலை மக்களை பிரதிநிதித்துவப்படுத்த புதிய கட்சி தேவையா?’ என கருத்து கணிப்பு நடத்தினார்.

இதில், 56.30 லட்சம் மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதிலும் சரியாக 80 சதவீதம் பேர் புதிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்த முடிவுகளை பார்த்து ஆச்சரியப்பட்ட எலான் மஸ்க், ‘மக்கள் கருத்துக்களை கூறிவிட்டனர். இது தான் விதி’ என கூறியவர், கட்சிக்கு ‘தி அமெரிக்கா பார்ட்டி’ என்ற பெயரை சமூக வலைதளத்தில் நேற்று அறிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article