3 C
Scarborough

எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும் – ராசிபலன் 29.12.2025

Must read

மேஷம்

நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். வேலைகள் தள்ளிப் போகும். காதல் கண் சிமிட்டும். உறவினர்கள் வருகை உண்டு. மருத்துவ செலவு குறையும். பார்ட்னரிடம் பொறுமை அவசியம். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பெற்றோர்களின் உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தம்பதிகளின் அன்பு மேலோங்கும். திருமணம் நடந்தேறும். உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்படும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். மறுக்காமல் செய்து கொடுப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தாய் வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. புதியவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கடகம்

பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு. வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உயர் ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். உறவினர்களால் நன்மை உண்டு. உடல் வலிமை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

கன்னி

இன்று சந்திராஷ்டமம் என்பதாலல் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாளாக அமைகிறது. ஆதலால், யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொதுவாக இன்று அமைதி காப்பது நல்லது. இறைவனை மட்டும் வழிபடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

துலாம்

உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர். பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். பண வரவு தாமதப்படும். உடல் ஆரோக்கியம் சீர்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

விருச்சிகம்

தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல துணை அமையும். முகம் வசீகரம் அதிகமாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெளிநாட்டு வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

பழைய உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். பழைய பாக்கி வசூலாகும். திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விருந்தினர்கள், உறவினர்கள் வருகையும் அதிகரிக்கும். இடுப்பு வலி மற்றும் மூட்டு வலி வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

பெற்றோரின் கனவு பலிக்கும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள். பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவுவர். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

கும்பம்

உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். பண வரவு தாமதப்படும். மாணவர்கள் படிப்பில் நன்கு முன்னேறுவர். மகன், மகள் திருமணத்தை தடபுடலாக நடத்துவர். வீடு மனை வாங்கும் போது ஆவணங்களை சரிபார்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எதிரிகள் விலகுவர். பணவரவில் பஞ்சமில்லை. இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர். உடல் ஆரோக்கியம் சீர்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

dailythanthi

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article