6.2 C
Scarborough

எங்களது சிறந்த ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை: நியூசிலாந்து கேப்டன்!

Must read

2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் நடக்க உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில் கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் முதலாவது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி தொடர்பாக பேசிய , நியூசிலாந்து கேப்டன் சான்டனர் கூறியதாவது,

தென்ஆப்பிரிக்க அணியில்நிறைய அதிரடி பேட்டர்கள் உள்ளனர். இந்ததொடரில் எங்களது மிகச் சிறந்த ஆட்டம் இன்னும்வெளிப்படவில்லை. இது எங்களுக்கு நல்ல விஷயம் என்று நினைக்கிறேன்.எல்லா வகையிலும் ஒருங்கிணைந்து விளையாடினால் மிகவும் நல்லநிலையில் இருப்போம்.முடிந்த வரை ஆடுகளத்தன்மை மற்றும் சூழக்குதகுந்தபடி எங்களை விரைவாக மாற்றிக்கொள்ளவேண்டும். 220 ரன்களுக்கு முயற்சிப்பதற்கு பதிலாக 180 ரன்கள் எடுத்தாலே அது நல்ல ஸ்கோராக இருக்கும்.என தெரிவித்தார்.

Image – ESPN

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article