கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, டொரண்டோ மக்களால் எதிர்பார்க்கப்பட்ட எக்லின்டன் க்ராஸ்டவுன் எல்.ஆர்.டி (Eglinton Crosstown LRT) திட்டம் இவ்வருடம் செப்டம்பர் மாதமளவில் திறக்கப்படும் எனப் பெரிய நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த திட்டம் திறக்கப்படும் திகதியை ஊகித்து கூறுவோருக்கான பரிசளிக்கும் போட்டியொன்றை FanDuel நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுபோன்ற உள்நாட்டு மற்றும் கலாச்சார சம்பவங்களை மையமாகக் கொண்ட புதிய வகை பந்தயங்களை உருவாக்குவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் Metrolinx நிறுவனம் வெளியிட்ட எல்ஆர்டி திட்ட நிலைமையைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்கள் பந்தயம் வைக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
FanDuel நிறுவனம், பொறுப்புடன் விளையாடும் பண்பை ஊக்குவிக்கும் வகையில், இப்பந்தயங்களுக்கு குறைந்த உச்ச வரம்புகளை நிர்ணயித்துள்ளதமையும் குறிப்பிடத்தக்கது.