அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா, மெக்சிகோ முதலான நாடுகள் மீது வரி விதிப்பதிலிருந்து கொஞ்சமும் பின்வாங்குவதுபோல் தெரியவில்லை.
அதேநேரத்தில், கனடாவும், ட்ரம்பின் செயல்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை என முடிவு செய்துள்ளாற்போல் தெரிகிறது.
அமெரிக்கா, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிக்க முடிவு செய்துள்ளது.
இந்த வரிகள், நாளை செவ்வாய்க்கிழமை, அதாவது, பிப்ரவரி மாதம் 4ஆம் திகதி அமுலுக்கு வரும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிக்க கனடாவும் முடிவு செய்துள்ளது.
அத்துடன், ஒரு படி மேலே போய், மற்றொரு அதிரடி முடிவையும் எடுக்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முடிவு செய்துள்ளார்.