17.5 C
Scarborough

உலக நாடுகளின் தடையை எதிர்கொள்ளும் அபாயத்தில் இலங்கை – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Must read

இலங்கையிலுள்ள பல தனிநபர்கள் மீது தடைகளை விதிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படலாம் என்று வழக்கறிஞர் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையை இலங்கையே ஏற்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல ஆணையங்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் பரிந்துரைகள் எதையும் எந்த அரசாங்கமும் செயல்படுத்தாமையே இதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் தடை

முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா மற்றும் பலர் மீது பிரித்தானியா தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல தனிநபர்கள் மீது பிரித்தானியா தடைகளை விதித்துள்ளது.

சொத்துக்கள் தடை

மேலும் அவர்கள் பிரித்தானியாவிற்கு பயணம் செய்வதற்கும், பிரித்தானியாவில் சொத்துக்கள் வைத்திருப்பவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில் அவர்களின் பெயர்களில் சொத்துக்கள் இருந்தால் தடை செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article