14.6 C
Scarborough

உலக தலைவர்கள் பங்கேற்பு; இத்தாலியில் பல அடுக்கு பாதுகாப்பு!

Must read

வரும் சனிக்கிழமை (26) ஆம் திகதி உலக கத்தோலிக்க தலைவர் போப் பிரான்ஸிஸ் இறுதி நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில், வத்திகானில் இதுவரை இல்லாத அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

88 வயதான போப் பிரான்சிஸ் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். போப் இன் இறுதி நிகழ்வில் பங்கேற்க பல உலகத் தலைவர்கள் வத்திக்கான் செல்ல உள்ளனர்.

அதிபர் டொனால் ரம், மற்றும் பிரித்தானிய இளவரசர் வில்லியம் ஆகியோர் முக்கிய VIPகளாக கலந்து கொள்ள உள்ளார்கள். இதனால் வத்திக்கான் நகர வான் பரப்பில் எந்த விமானமும் பறக்க கூடாது என்ற தடை போடப்பட்டுள்ளது.

அங்கே விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், ட்ரோன்களை தாக்கி அழிக்கும் அதி நவீன லேசர் ஆயுதங்கள், என்று வான் பாதுகாப்பு பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது.

இது போக வத்திக்கான் நகரில் சுமார் 8,000 பொலிசார் களம் இறக்கப்பட்டுள்ளார்கள். இறுதி ஊர்வலம் நடந்து முடியும் வரை, அமெரிக்க ஸ்பை(புலனாய்வு) விமானம் வானில் பறப்பில் இருக்கும் என்றும். அது தரை மற்றும் வாணில் என்ன நடக்கிறது என்று நோட்டமிட்டு கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை பிரித்தானியா தனது வருங்கால மன்னர் வில்லியம் அங்கே செல்வதால், அவருக்கான மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பல உலகத் தலைவர்கள் வத்திக்கானில் சனிக்கிழமை கூட உள்ளார்கள்.

இதில் இலட்சக் கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது. இதனால் நகரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால் ரம்பை பாதுகாக்க, அமெரிக்காவின் சிறப்பு நேவி – சீல் படைகள் ஏற்கனவே வத்திக்கான் சென்றுவிட்டது என்ற அதிரும் தகவல் வெளியாகியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article