உலக கராத்தே சம்மேளனம் புதிய சின்னத்தினை (Logo) புதன்கிழமை (10) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக தேசிய கராத்தே தெரிவுக்குழுவின் தலைவர் அன்ரோ டினேஷ் தெரிவித்துள்ளார்.
உலக கராத்தே சம்மேளனத்தின் புதிய சின்னம் கராத்தே கலையின் விழுமியங்களான மரியாதை, மதிப்பீடுகள் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றினை பேணும் வகையில் (WKF) இன் சின்னத்தினை நவீனமயமாக்கியுள்ளது.
இது கராத்தே விளையாட்டின் பரிணாம வளர்ச்சியையும், ஒழுக்கம், முன்னேற்றம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான அதன் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
புதுப்பிக்கப்பட்ட இந்த சின்னம் அடையாளம், சர்வதேச விளையாட்டு சம்மேளனங்களின் முன்னணியில் WKF இனை நிலைநிறுத்தும் ஒரு புதிய, சமகால தோற்றத்தைக் கொண்டுவருகிறது.
மேலும் கராத்தே கலையின் பாரம்பரியத்திற்கும் அதன் வளர்ந்து வரும் உலகளாவிய இடையிலான தொடர்பினையும் வலுப்படுத்துகிறது, இந்த புதிய சின்னம் அடையாளம் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் அதேவேளை அனைத்து WKF நிகழ்வுகளும் 2026 இல் ஆரம்பமாகும் அனைத்து போட்டிகளிலும் புதுப்பிக்கப்பட்ட சின்னத்தினை (Logo) உபயோகித்து வெளிப்படுத்தபடவுள்ளது. உலக கராத்தே சம்மளனம் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) அங்கீகாரத்தினை பெற்றுள்ளமை குறிப்படத்தக்கது.

