கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஐபிஎல் அணியிலிருந்து முஸ்டாபிஸுர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசம் பங்கேற்கும் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கோரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முஸ்டாபிஸுரை நீக்கவேண்டும் என்று பாஜக, சிவசேனா, இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இவரை கடந்த மாதம் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ.9.20 கோடிக்கு கேகேஆர் நிர்வாகம் எடுத்திருந்தது. இதையடுத்து பிசிசிஐ உத்தரவின் பேரில் முஸ்டாபிஸுரை கேகேஆர் அணி நிர்வாகம் விடுவித்துவிட்டது.

