14.6 C
Scarborough

உலகக் கோப்பை கால்பந்து -முன்னேறியது பேயர்ன் முனிச் அணி

Must read

கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் இடம்பெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டியிடுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடத்தை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும்.

நேற்று முன்தினம் 4 லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் ‘சி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணி 2-1 என்ற கோல் கணக்கில் போகா ஜூனியர்சை (அர்ஜென்டினா) வீழ்த்தி தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்றதுடன் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கும் முன்னேறியது.

பேயர்ன் முனிச் அணியில் ஹாரி கேன் (18-வது நிமிடம்), மைக்கேல் ஒலிசியும் (84-வது நிமிடம்), போகா ஜூனியர்ஸ் தரப்பில் மிகுல் மிரென்டியலும் (66-வது நிமிடம்)

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பென்பிகா (போர்ச்சுகல்) அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஒக்லாந்து சிட்டியை (நியூசிலாந்து) பந்தாடியது. பென்பிகா அணியில் ஏஞ்சல் டி மரியா, லியான்ட்ரோ பார்ரியோ தலா 2 கோல் அடித்தனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article