பணியின் போது உயிரிழந்த கனேடிய தீயணைப்பு வீரர்களின் நினைவிடத்தில் நாடு முழுவதிலுமிருந்து குடும்பங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கூடி ஞாயிற்றுக்கிழமை மாலை Ottawa வில் ஒரு புனிதமான அஞ்சலி நிகழ்வை நடாத்தினர்.
Lett வீதியில் உள்ள வீழ்ந்த கனேடிய தீயணைப்பு வீரர்களின் நினைவிடத்தில் பெயர்கள் பொறிக்கப்பட்ட 140 தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விழா உணர்வு பூர்வமாக நினைவேந்தப்பட்டது.
தனது கணவர் மற்றும் மகனை குறித்த சம்பவத்தில் இழந்தவரான Betty Jane Coles தன் கணவரையும் மகனையும் நினைவு கூர்ந்து கொள்வதற்காக இங்கு ஒன்று கூடியதாக கூறியதுடன் 56 வருடங்களாக திருமணமாகி வாழ்ந்த தங்கள் வாழ்க்கையை நினைத்து மிகவும் மன அழுத்தமாக இருப்பதாகவும் ஆனால் இங்கே ஒன்று கூடியிருப்பதால் ஒரு மரியாதையாக உணர்வதாகவும் தனது நினைவுகளைப் பகிர்ந்தார்.
இந்த நிகழ்வை Canadian Fallen Firefighters Foundation நடத்தியது, நாங்கள் ஒரு அன்புக்குரியவரை இழக்கும்போது அது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த அறக்கட்டளையின் நோக்கம் தியாகங்களை நினைவில் கொள்வது மட்டுமல்ல அந்த தியாகங்களை ஒருபோதும் மறக்க முடியாது என்பதை குடும்பங்களுக்கு நினைவூட்டுவதாகும் என்று அறக்கட்டளையின் தலைவர் David Sheen கூறினார்.