5.1 C
Scarborough

உதவியை குறைக்கும் கனடிய அரசாங்கம்

Must read

பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடா அரசு, நாட்டின் வெளிநாட்டு உதவி நிதியை தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு குறைக்கும் திட்டத்தை தனது 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்துள்ளது.

இது, தேர்தல் பிரசாரத்தின் போது “வெளிநாட்டு உதவி குறைக்கப்படாது” எனக் கூறிய வாக்குறுதியை மீறுவதாக தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

வரவு செலவுத் திட்டத்தில், அடுத்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 2.7 பில்லியன் கனடிய டாலர் அளவிலான குறைப்புகள் செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது உலக சுகாதார திட்டங்கள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சி மையங்களுக்கு வழங்கப்படும் நிதியையும் பாதிக்கவுள்ளது. அரசு இவ்வாண்டுக்கான சரியான வெளிநாட்டு உதவி மதிப்பீட்டை வெளியிடவில்லை.

முக்கிய தேவையுள்ள நாடுகளுக்கு ஆதரவை மையப்படுத்தி, புதுமையான கருவிகளை பயன்படுத்துவது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில சர்வதேச நிதி நிறுவனங்களுக்கான நிதியும் குறைக்கப்படவுள்ளது. கனடா கடந்த நிதியாண்டில் (மார்ச் 2024 முடிய) 6 பில்லியன் டாலர் வெளிநாட்டு உதவிக்காகவும், 2.6 பில்லியன் டாலர் சர்வதேச நிதி உதவிக்காகவும் செலவிட்டது.

மொத்தம் 12.3 பில்லியன் டாலர் வெளிநாட்டு உதவி தொடர்பான செலவுகளாக பதிவாகியுள்ளது. கோவிட் தொற்றுநோய்க்காலத்தில் கனடா வெளிநாட்டு உதவியை பெரிதும் அதிகரித்தது.

ஆனால் தற்போது பல அபிவிருத்தி நாடுகள் கடன் நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தால் உருவான இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

கனடிய அரசாங்கத்தின் உதவி குறைப்பு திட்டத்திற்கு தொண்டு நிறுவனங்கள் கடும் அதிருப்திபையையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன.

canadamirror

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article