3 C
Scarborough

உண்மையில்லாவிட்டால் இருவரும் இல்லாமல் போவர்கள்!

Must read

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலிருந்து ஓய்வுபெறுவதாக கூறியுள்ளாரென பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஊடகமொன்றிற்கு அவர் வழங்கியிருந்த பேட்டியொன்றில் இதுகுறித்து மேலும் கூறுகையில்

“முன்னாள் ஜனாதிபதி நாட்டை மீடெடுக்க அவரால் முடியும் என்பதை ஒப்புவித்துள்ளார். எவ்வாறாயினும் அவர் தற்போது அரசியலிருந்து ஓய்வெடுப்பதாக அறிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியினர் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த பின்னர் அதற்கு கீழ் மட்டத்திலுள்ள பதவிகளுக்கு செல்வதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றனர்.

ஒரு மாதத்திற்கு முன்பும் அதுகுறித்து வினவப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒன்றிணைந்து செயற்படுவதற்குரிய பேச்சுக்கள் சாதகமான இடம்பெற்றும் வரும் வேளையில் இந்த நிலைப்பாடு மிக முக்கியமானது. இதன்போதும் அவர் அரசியலிருந்து ஓய்வுபெற்றுவிட்டதாகவே கூறினார்.

இவ்வாறிருக்க இந்த விடயத்தில் பிரச்சினைகளை தூண்டிவிடாமல் அதனை மட்டுப்படுத்துவதே அவசியமாகிறது. அவர் வரவேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கு நன்றிக்கடன் அடிப்படையில் ஏற்பாடுகளை செய்துகொடுக்கத் தயார்.

மறுமுனையில் ரணில் – சஜித் சங்கமம் குறித்த பேச்சுக்கள் இரு தரப்பிலும் ஒரு சிலரை தவிர இரு தரப்பிலும் இருக்கும் ஏனைய உறுப்பினர்கள் குழப்பமின்றி செயற்படுகின்றனர்.

ஆனால் இந்த விடயத்தில் ரணில் விகரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் மட்டும் பேசி முடிவெடுப்பதே காலத்தின் தேவை. இடைநடுவில் வந்தால் இது தோல்வியில் முடியலாம்.

எவ்வாறாயுனும் இந்த விடயம் சரியாக நடக்கிறது என்பதை உறுதியாக கூற முடியும். ஆனால் இதில் யாரேனும் ஒருவர் பொய் செய்ய முற்பட்டால் அதனால் இருவரும் இல்லாமல் போவார்கள் என்பதும் உறுதி. அதனை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும்.” என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article