ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து விவாதிக்க, ஓகஸ்ட் 15 ஆம் திகதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நடைபெறவுள்ளதாக ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய 2018ஆம் ஆண்டு பின்லாந்தில் நடந்த சந்திப்புக்குப் பின்னர் 6 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க தலைவர் மற்றும் புட்டினுக்கு இடையேயான முதல் நேரடி சந்திப்பு இதுவாகும்.
சந்திப்பில், உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே பிரதேசங்களை “பரிமாற்றம்” செய்வது குறித்து பேசப்படலாம் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். “மூன்றரை ஆண்டுகளாகப் கையகப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் குறித்து பேசுவோம். சில பிரதேசங்களை மீட்பது, சிலவற்றை பரிமாறுவது பற்றி பேச்சு நடக்கும். இது சிக்கலானது, ஆனால் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் முடிவு எடுக்கப்படும்,” என அவர் பதிவிட்டுள்ளார்.
ரஷ்யாவுக்கு ஓகஸ்ட் 8 ஆம் திகதியை உக்ரைனுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்படுவதற்கு காலக்கெடுவாக ட்ரம்ப் நிர்ணயித்திருந்தார். எனினும் இதற்கு உடன்படுவதாக ரஷிய தலைவரிடம் இருந்து எந்த பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை. இதன் பின்னணியில் ட்ரம்ப் பொருளாதார ரீதியாக தீர்மானம் எடுக்கலாம் என கூறப்படுகிறது.