உக்ரைன் போர் தொடர்பாக மும்முனை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முனிச்சில் இன்று நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க, ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடுவார்கள் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து இதன் போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்று ட்ரம்ப் கூறினார்.