14.6 C
Scarborough

’ஈரான் ஒருபோதும் சரணடையாது’

Must read

ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் ஈடுசெய்ய முடியாத சேதத்துடன் இருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பதிலடி கொடுத்துள்ளார்.

தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தொலைக்காட்சி உரையில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறும்போது,

ஈரான் ஒருபோதும் சரணடையாது. ஈரான் திணிக்கப்பட்ட போருக்கு எதிராக உறுதியாக நிற்கும். அதேபோல் திணிக்கப்பட்ட அமைதிக்கு எதிராகவும் உறுதியாக நிற்கும். திணிக்கப்பட்டால் இந்த நாடு யாருக்கும் சரணடையாது. ஈரானையும் அதன் வரலாற்றையும் அறிந்தவர்கள், ஈரானியர்கள் அச்சுறுத்தலின் மொழிக்கு சரியாக பதிலளிக்க மாட்டார்கள் என்பதை அறிவார்கள். எந்தவொரு அமெரிக்க ராணுவத் தலையீடும் சந்தேகத்துக்கு இடமின்றி சரிசெய்ய முடியாத விளைவுகளுடன் இருக்கும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.

இதனிடையே, நேற்று தனது அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்,

“தேசிய ஒற்றுமையுடன் எந்த நெருக்கடியையும் நாங்கள் சமாளிப்போம். மக்கள் எங்களுடன் நின்றால், எந்தப் பிரச்சினையும் நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்காது. அதனால்தான் அனைத்து நடவடிக்கைகளும் தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பது அவசியம் என்றார்.

மேலும், அண்டை நாடுகள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததோடு, ஈரான் அமைச்சர்கள் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article