14.6 C
Scarborough

ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு – பாபா வங்காவின் கணிப்பு!

Must read

ஈரான் இஸ்ரேல் போர் சூழலில், பாபா வங்காவின் போர் தொடர்பான கணிப்பு கவனம் பெற்றுள்ளது.

பாபா வங்கா

பால்கன் நாடுகளின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பாபா வங்கா, 1911ஆம் ஆண்டில் பல்கேரியா நாட்டில் பிறந்து, 1996ஆம் ஆண்டில் மரணமடைந்தவர்.

சிறு வயதிலேயே தனது கண்பார்வையை இழந்த பாபா வங்கா, அதன் பிறகு எதிர்காலத்தை கணிக்கும் திறனை பெற்றுள்ளதாக கூறுகிறார்.

பாபா வங்கா

இதன்படி, 9/11 இரட்டைக்கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம், கோவிட் என இவரது பல்வேறு கணிப்புகள் நடந்துள்ளதால், பாபா வங்கா உலகளவில் கவனம் பெற்றார்.

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் நடைபெற்று வரும் சூழலில், போர் குறித்த பாபா வங்காவின் கணிப்புகள் குறித்து தற்போது கவனம் பெற்றுள்ளது.

ரஷ்யா உக்ரைன் போர்

இரு ஐரோப்பிய நாடுகள் இடையே நடைபெறும் போர் மக்களை பேரழிவிற்கு ஆட்படுத்தும் என கூறி இருந்தார்.
அதேபோல், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிரியா வீழ்ந்தவுடன், மேற்கு மற்றும் கிழக்கிற்கு இடையே ஒரு பெரிய போரை எதிர்பார்க்கலாம். வசந்த காலத்தில், கிழக்கில் தொடங்கும் ஒரு போர் மூன்றாம் உலகப் போர் இருக்கும். இந்த போரில் கிழக்கு மேற்க்கை அழிக்கும் என தெரிவித்துள்ளார்.

அதன்படி, சிரியாவில் நடைபெற்று வந்த பஷார் அல் அசாத்தின் ஆட்சி, கடந்த ஜனவரி மாதம் புரட்சி படைகளால் வீழ்த்தப்பட்டது.

ஈரான் இஸ்ரேல் போர்

தற்போது மத்திய கிழக்கு நாடான ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி இஸ்ரேல் அதன் மீது போர் தொடுத்துள்ளது.
இந்த போரில், அமெரிக்கா போன்ற மேற்குல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஈரானுக்கு எதிராகவும் உள்ளன.
ஈரானின் உச்சத்தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டால் தான் போர் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, எந்தவித நிபந்தனையுமின்றி காமெனி சரணடைய வேண்டுமெனவும், அவரின் இருப்பிடம் எங்களுக்கு தெரியும் என கூறிய டிரம்ப், அமெரிக்காவின் விமானம் தாங்கிய போர் கப்பல்களையும்(GSC), எரிபொருள் நிரப்பும் விமானங்களை மத்திய கிழக்கு நோக்கி நகர்த்தி வருகிறது.

“இந்த போரில் சரணடையபோவதில்லை. ஈரானை தாக்கிய இஸ்ரேலுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். அமெரிக்கா இதில் தலையிட்டால் பாரிய சேதாரத்தை சந்திக்கும்” என ஈரானின் உச்சத்தலைவர் அலி காமெனி எச்சரித்துள்ளார்.

ஈரானின் பனிப்பாறை அடியில் அமைந்துள்ள ‘போர்டோ எரிபொருள் செறிவூட்டும் மையம்’ போன்ற அணு உள்கட்டமைப்புகளை அழிக்க அமெரிக்காவிடம் MOP ரக வெடிகுண்டை இஸ்ரேல் கோரியுள்ளது.
ஈரானின் மீது MOP ரக வெடிகுண்டை வீசினாலோ, அல்லது அமெரிக்கா போரில் ஈடுபட்டாலோ இது உலகப்போராக மாறும் சூழல் எழுந்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article