கனடாவின் தோர்ன்ஹில் (Thornhill) பகுதியில் ஈரானியருக்குச் சொந்தமான உடற்பயிற்சி நிலையம் (Gym) ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் Yonge Street மற்றும் Steeles Avenue West சந்திப்புக்கு அருகில் உள்ள Saliwan Boxing Gym மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது கட்டிடம் காலியாக இருந்ததால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
எனினும், கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் முன்வாயில் பலத்த சேதமடைந்துள்ளன.
இந்த இடம் கடந்த சில மாதங்களாக ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கோரிப் போராடும் புலம்பெயர் ஈரானியர்கள் ஒன்று கூடும் இடமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது திட்டமிடப்பட்டத் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கும் York Regional Police, துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

