ஆளில்லா விமானம் தாங்கி போர்க்கப்பலை ஈரான் முதன்முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டாக நீடித்த நிலையில் தற்போது தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த போரில் ஹமாசுக்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருகிறது.
மேலும், இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கும் அதிகரித்து வருகிற அதேவேளை ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடற்படை பலத்தை அதிகரிக்கும் விதமாக ஆளில்லா விமானம் தாங்கி போர் கப்பலை (drone-carrier warship) ஈரான் முதன் முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த போர் கப்பலில் ஆளில்லா விமானங்கள் (drone) தவிர ஹெலிகொப்டர்கள், ஏவுகணைகளையும் பயன்படுத்த முடியும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.