இஸ்ரேலின் தாக்குதல்களில் 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், 3,056 பேர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரானின் சுகாதார அமைச்சக மக்கள் தொடர்புத் தலைவர் ஹொசைன் கெர்மன்பூர், உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வழங்கியுள்ளார்.
“9வது நாளாக தொடரும் தாக்குதல்களில் 54 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டனர். 3,056 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் ஆவர் என அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களில் காயமடைந்தவர்களில், 2,220 பேர் சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில் 232 பேர் தாக்குதல் நடந்த இடத்திலேயே வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இந்தக் காலகட்டத்தில், நாடு முழுவதும் உள்ள எங்கள் மருத்துவக் குழுக்கள் காயமடைந்தவர்களுக்கு 457 அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளன.” என்று தெரிவித்தார்.