ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள எவின் சிறைச்சாலையில் கடந்த 23 ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் இன்று (29) தெரிவித்துள்ளது.
நிர்வாக ஊழியர்கள், ராணுவ வீரர்கள், கைதிகள், சிறைச்சாலையைச் சுற்றி வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அருகில் வசித்தோர் உட்பட 71 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
எவின் சிறைச்சாலையின் நிர்வாகக் கட்டிடத்தின் ஒரு பகுதி தாக்குதலில் சேதமடைந்தது, மேலும் பலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
எவின் சிறையில் மூன்று ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள இரண்டு பிரெஞ்சு நாட்டவர்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டினர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் தெஹ்ரானின் மிகவும் பிரபலமான அரசியல் கைதிகள் சிறைச்சாலையைத் தாக்கியது, இது ஈரானின் ஆட்சியின் சின்னங்களை குறிவைத்து இராணுவம் மற்றும் அணு ஆயுத தளங்களுக்கு அப்பால் தனது இலக்கை விரிவுபடுத்துகிறது என்பதைக் குறிக்கிறது என ஈரான் தெரிவித்துள்ளது.