22.5 C
Scarborough

இழப்பீடு வாங்கிய பயணிக்கு எதிராக Air Canada வழக்கு

Must read

கனடாவின் முக்கிய விமான சேவை நிறுவனமான Air Canada, ஒரு பயணியை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளது.

அப்பயணி, தற்காலிகமாக இழந்த பைக்கு ஈடாக அதிகளவு இழப்பீடு கேட்டதன் காரணமாக இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அலா தன்னுஸ் (Alaa Tannous) மற்றும் அவரது மனைவி நான்சி, 2022-ல் ஏர் கனடா விமானம் மூலம் பயணம் செய்தபோது, அவர்களின் பையொன்று (Luggage) தொலைந்து போனது. எனினும், அந்தப் பை 24 மணிநேரத்திற்குள் திரும்பக் கிடைத்தது.

ஆனால், அந்த இடைவேளையில் தன்னுஸ் புதிதாக வாங்கிய உடைகள், கழிவறை பொருட்கள் மற்றும் தனிப்பயன் சாமான்கள் ஆகியவற்றிற்காக 3,435 கனடியன் டொலர் இழப்பீடு கேட்டார்.

ஆனால், ஏர் கனடா மிக குறைவாக 250 டொலர் மட்டுமே வழங்க முன்வந்தது.

இதனால், கனடிய போக்குவரத்து அதிகாரம் (CTA) ஏர் கனடாவை 2,079 டொலர் வழங்க உத்தரவிட்டது.

ஆனால், ஏர் கனடா CTA தீர்ப்பை எதிர்த்து, அப்பயணிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

ஏர் கனடாவின் விளக்க அறிக்கை

ஏர் கனடா வெளியிட்ட நீண்ட விளக்கத்தில், தன்னுஸ் செலவிட்ட தொகை மிக அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

570.12 டொலர் – கழிவறை பொருட்கள், தோல் பராமரிப்பு & மேக்கப்
1,121.86 டொலர் – இரண்டு பேண்ட்கள், மூன்று சட்டைகள் மற்றும் ஒரு 348.84 டொலர் மதிப்புள்ள உடை
247.52 டொலர் – நாலு செட் இனர்வேர் & ஸ்லீப் வேர்
525.50 டொலர் – அண்டர்வேர், ஜீன்ஸ் & இரண்டு டீஷர்ட்
433.61 டொலர் – பெண்களின் ஷூஸ் (பையைக் கண்டுபிடித்த பிறகு வாங்கியது)
1,310.40 டொலர் – தனிப்பயன் மொனோகிராம் செய்யப்பட்ட Tumi பயணப்பை
Air Canada sues passenger, Alaa Tannous, Air Canada, Luggage Missing Compensation

தன்னுஸ் தரப்பில் இருந்து

ஏர் கனடா உடனடியாக பையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், புதியவை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தன்னுஸ் கூறியுள்ளார்.

ஏர் கனடா ‘ஒரு நியாயமான தொகையை’ ஈடுசெய்யலாம் என தெரிவித்ததாக கூறுகிறார்.

மேலும், CTA அவருக்கு வழங்கிய தொகை கூட புதிய பயணப்பைக்கு போதுமானதாக இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு விமான நிறுவனங்களின் நியாயமான பொறுப்புகள் குறித்து புதிய விவாதங்களை தூண்டியுள்ளது. வழக்கு யாருக்கு சாதகமாக முடியும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article