விமானப் பயணத்தின் போது விமானப் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்த முயன்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட ஸ்வீடிஷ் நாட்டவருக்கு மேலதிக நீதவான் நீதிமன்றம் 26,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்,
தனது கட்சிக்காரர் சம்பவம் குறித்து வருத்தப்படுவதாக தெரிவித்தார். அந்த நேரத்தில் அவர் மது போதையில் இருந்ததாகவும், அவருக்கு எந்த குற்ற நோக்கமும் இல்லை என்றும் மேலும் கூறினார்.
சமர்ப்பிப்புகளைக் கருத்தில் கொண்டு, 26,500 அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.