1.8 C
Scarborough

இலங்கை வந்துள்ள இந்திய போர் கப்பல்

Must read

இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘INS SUKANYA’ உத்தியோகப்பூர்வ விஜயத்திற்காக நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘INS SUKANYA’ 2025 நவம்பர் 18 ஆம் திகதி காலை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக நாட்டை வந்தடைந்ததுஇ

இந்நிலையில், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

தீவை வந்தடைந்துள்ள ‘INS SUKANYA’ என்ற போர் கப்பல் 101 மீட்டர் நீளம் கொண்டதுடன், இந்த போர் கப்பலின் கட்டளை அதிகாரியாக COMMANDER, SANTOSH KUMAR VERMA கடமையாற்றுகின்றார்.

இந்தக் போர் கப்பல் தீவில் தங்கியிருக்கும் காலத்தில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கப்பலின் அங்கத்துவ குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

மேலும், நாட்டின் பல முக்கிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, ‘INS SUKANYA’ என்ற போர் கப்பலானது 2025 நவம்பர் 21 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது…

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article