பல ஆபிரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (12) காலை ஒரு குறுகிய பயணமாக இலங்கை வந்த சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றது.
இலங்கையின் இயற்கை அழகில் தான் ஆழ்ந்த பற்று கொண்டுள்ளதாகவும், இலங்கை சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடு என்ற செய்தியை தெரிவிப்பதாகவும் Wang Yi இதன்போது கூறியுள்ளார்.
கலந்துரையாடலைத் தொடர்ந்து, சீன வெளியுறவு அமைச்சர் மற்றும் குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசேட விமானத்தில் பெய்ஜிங்கிற்கு புறப்பட்டனர்.

