8.7 C
Scarborough

இலங்கை சினிமாவின் ராணி காலமானார்!

Must read

இலங்கை சினிமாவின் ராணி  என அறியப்பட்ட பிரபல  நடிகை மாலினி பொன்சேகா  இன்று காலமானார்.

76 வயதான அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே  உயிரிழந்துள்ளார்.

1968 இல் திஸ்ஸ லியன்சூரியவின் “புஞ்சி பபா” என்ற திரைப்படத்துடன் சினிமா பயணத்தை ஆரம்பித்தார். ஆறு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார்.

2010 ஆம் ஆண்டில், ஆசியாவின் 25 சிறந்த திரைப்பட நடிகர்களில் ஒருவராக சி.என்.என் ஊடகத்தால் பெயரிடப்பட்டார்.

1978 ஆம் ஆண்டு பைலட் பிரேம்நாத் தமிழ்த் திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார்.

இலங்கையின் சினிமாத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம்கூட அனுப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article