2027 ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமத்தை இரண்டாவது தடவையாக இலங்கை பெற்றுள்ளது. அண்மையில் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்து சம்மேளனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இது இலங்கைக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகும் என்று ஆசிய வலைப்பந்து சம்மேளன தலைவி விக்டோரியா லக்ஷ்மி குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு அவர் நன்றிகளையும் தெரிவித்தார். லக்ஷ்மி இலங்கை வலைப்பந்து சம்மேளத்தின் முன்னாள் தலைவி ஆவார்.
இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டே இலங்கை இந்தத் தொடரை நடத்தி இருந்தது. தவிர 16 வயதுக்கு உட்பட்ட தெற்காசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரையும் நடத்த இலங்கை திட்டமிட்டுள்ளது.