18.5 C
Scarborough

இலங்கையில் செம்மணிப் புதைகுழி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள Conservative தலைவர்

Must read

Conservative கட்சியின் தலைவர் Pierre Poilievre கறுப்பு ஜூலை நினைவு நாளையொட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் பாரம்பரியத்தை உடைய கனேடியர்கள் கறுப்பு ஜூலை நினைவு நாளை சோகத்துடன் நினைவுகூர தயாராகும் வேளையில், இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையின் கொடூர பாரம்பரியம் மீண்டும் நம்மை வாட்டுகிறது.

செம்மணியில் அகழ்வாராய்ச்சி தொடங்கி ஒரு மாதமாகிறது. அங்கு பல குழந்தைகள் உட்பட ஏராளமான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள புதைக்குழிகள் தற்போது வெளிவந்துள்ளன. 1983 இல் நடந்த இனப்படுகொலையின் புதிய ஆதாரங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தமிழ் மக்கள் வாழ்ந்த துயரமிகு வாழ்க்கையின் ஒரு பகுதியை மீண்டும் வெளிக்கொணர்கிறது.

மனித எலும்புகள் மண்ணின் அடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டன. பின்னர் நடந்த நீதிமன்ற கண்காணிப்பு அகழ்வில், சிறார்களின் பாடசாலை Bags, பொம்மைகள், உடைகள் என்பன கட்டுக்கட்டாகக் கண்கள் கட்டப்பட்ட உடல்களுடன் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் கொடுமை விவரிக்க முடியாதது.

தமிழர்களின் போரில் காணாமல் போன உறவுகள் தவறுதலாக போனவர்கள் இல்லை அவர்கள் கைது செய்யப்பட்டு மௌனமாக்கப்பட்டனர், இரகசியமாக புதைக்கப்பட்டனர். உலகில் எங்கே வெட்கக்கேடான கொடூர நிகழ்வுகள் நடந்திருக்கிறதோ, அங்கு நீதி தேடும் முயற்சியில் கனடா பொறுப்புடன் குரல் கொடுக்க வேண்டும். அதுவே நம்முடைய கடமை.

இந்தப் பாரத்தை நீண்ட காலமாக சுமந்துவரும் தமிழ் குடும்பங்களுடன்
முன்னதாக நான் உறுதியாக தெரிவித்தது போலவே, எதிர்கால Conservative அரசு தெளிவான நடவடிக்கைகளை எடுக்கும்:

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலையின் பொறுப்பாளர்களுக்கு எதிராக நாம் தடைகள் விதிப்போம். இந்த குற்றங்களை விசாரிக்கவும் பொறுப்பாளர்களை நீதிமன்றத்தில் கொண்டுவரவும் சர்வதேச முயற்சிகளை நாம் ஆதரிப்போம். இதில் இனப்படுகொலை செய்த ராஜபக்ச அரசாங்க உறுப்பினர்களும் அடங்குவர்.

கனடா யாருக்கும் குறிப்பாக போர் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பான தங்குமிடமாக இருக்க முடியாத வகையில் நமது கூட்டாளிகளுடன் இணைந்து செயற்படுவோம்.

எனது தலைமையில் உள்ள Conservative கட்சி தமிழினப் படுகொலைக்கு நிச்சயமாக அங்கீகாரம் அளித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கப்படும் நாடாக கனடா இருக்க வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியுடன் இருக்கிறேன்.

தமிழ் சமூகத்தினராகிய உங்களின் நீதி தேடும் பயணம் நேர்மை மிகுந்தது. நீங்கள் இந்த பாதையை தனியாக கடக்க வேண்டியதில்லை. என்று அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article