1.8 C
Scarborough

இலங்கைக்கு விமானங்களை வழங்க முக்கிய இரு நாடுகள் இணக்கம்

Must read

” 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் C130 விமானங்கள் இரண்டை இலங்கைக்கு வழங்க அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஒப்புக்கொண்டுள்ளன.” –

என்று இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இலங்கையின் பாதுகாப்பு நிலை மற்றும் எதிர்கால ஏற்பாடுகள் பற்றியும் அவர் விளக்கமளித்துள்ளார். இது பற்றி அநுர கூறியவை வருமாறு,

” பாதுகாப்பு அமைச்சென்ற வகையில், எந்தவொரு பாதுகாப்புப் படையும் நமக்கு எந்த வகையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் தான் தயார் நிலையில் இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்.

இலங்கையில் மீண்டும் பாரிய உள்நாட்டுப் போர் சூழ்நிலைகள் ஏற்படாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மேலும் எந்தவொரு மேற்கத்திய நாடும் ஆக்கிரமிக்கும் நிலைமை எதுவும் இல்லை. தொழில்நுட்பத் துறை, சைபர் வெளி மற்றும் நவீன தொழில்நுட்ப கருவிகளில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள எங்கள் இராணுவ பொறிமுறையை தற்போது தயார் செய்து வருகிறோம்.

எங்கள் கடல் எல்லைகளின் பாதுகாப்பிற்கும் எங்களுக்கு ஒரு பொறுப்பு உள்ளது, மேலும் அதற்கு ஒரு அச்சுறுத்தல் உள்ளது. எங்கள் வான்வெளியின் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

அச்சுறுத்தலின் தன்மைக்கு ஏற்ப எங்கள் இராணுவத்தை நாங்கள் தயார் செய்து வருகிறோம். எனவே, நவீன தொழில்நுட்ப கருவிகளைக் கொண்ட இராணுவத்தை உருவாக்குவது எங்கள் அரசாங்கத்தின் கொள்கையாகும்.

கடந்த காலத்தில், எங்கள் இராணுவத்தை மறுசீரமைப்பதற்கு எமக்கு அதிகளவில் சர்வதேச ஆதரவு கிடைத்துள்ளது. குறிப்பாக, இந்தியாவிலிருந்து சுமார் 70 ஜீப்புகள் எங்களுக்குக் கிடைத்துள்ளன.

எங்கள் இராணுவத்தை மிகவும் திறமையான இராணுவமாக மாற்றுவதற்குத் தேவையான ஒரு அகடமி ஒன்றை அமைப்பதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான ஆதரவும் கிடைத்துள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டில் அமெரிக்கா எங்களுக்கு TH 57 வகை 10 ஹெலிகாப்டர்களை உதவியாக வழங்க உடன்பட்டது.

2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் C130 விமானங்கள் இரண்டை எங்களுக்கு வழங்க அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஒப்புக்கொண்டுள்ளன.

KA 360 எனப்படும் Beechcraft ஒன்றையும், இரண்டு KK 350 Beechcraft ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து உதவியாகப் பெறப்பட்டுள்ளன.

எங்கள் விமானப்படை ஹெலிகாப்டர் படை கணிசமாக பலவீனமடைந்துள்ளது. 10 புதிய ஹெலிகாப்டர்கள் கிடைக்க உள்ளன. தற்போதுள்ள ஹெலிகாப்டர்களைப் புதுப்பிப்பதற்கான டெண்டர்கள் கோரப்பட்டு அனைத்தும் தயாராக உள்ளன.

எனவே, நாங்கள் ஒரு சிறந்த நவீன மற்றும் திறமையான இராணுவத்தை உருவாக்கியுள்ளோம். இது எங்கள் பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம்.” – என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article