அமெரிக்க வரிகளின் அடிப்படையில் இலங்கை மிகப்பெரிய வரி குறைப்பைப் பெற்றுள்ளதாக வெளியுறவுத் துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது சமூக ஊடக பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் 44 வீதமாக இருந்த கட்டண விகிதம் ஜூலை மாதத்திற்குள் 30 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க வரி பட்டியலில் உள்ள மற்ற அனைத்து நாடுகளிலும் இலங்கை பெற்ற மிக உயர்ந்த வரி குறைப்பு இது என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
இந்த வெற்றி, இருதரப்பு உறவுகளிலும், அமைதியான, உறுதியான இராஜதந்திரத்திலும் அரசாங்கத்தின் முன்னேற்றத்தின் விளைவாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க நிர்வாகத்தின் பயனுள்ள தலையீடு மற்றும் இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்ற இலங்கைக் குழுவின் தொழில்முறைத் தன்மைக்கு அமைச்சர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இதேவேளை, 30 வீத வரி தொடர்பில் அமெரிக்காவுடன் தொடர்ந்து கலந்துரையாடல் நடத்தப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் காரணமாக இந்த வரி குறைப்பு சாத்தியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
எவ்வாறாயினும், 30 வீத வரி தொடர்பில் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை அமெரிக்காவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.