0.9 C
Scarborough

இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் கார்னி சீனா விஜயம்!

Must read

அடுத்த வாரம் பிரதமர் Mark Carney சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக, பிரதமர் அலுவலகம் புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

​January 13 முதல் 17 வரை நடைபெற உள்ள இந்தத் திட்டமிட்டப் பயணம், வர்த்தகம், எரிசக்தி, விவசாயம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஆகியவற்றில் Ottawa மற்றும் Beijing இடையிலான உறவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2018-ஆம் ஆண்டில், வங்கி மோசடி குற்றச்சாட்டுகளுக்காக அமெரிக்காவின் சார்பாக Huawei நிர்வாகி Meng Wanzhou ஐ கனடா கைது செய்ததிலிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பதற்றமாகவே இருந்து வருகிறது.

​அதற்கு அடுத்த சில நாட்களில், உளவு பார்த்ததாகக் கூறி கனேடியர்கள் இருவரை சீனா தனித்தனியாகக் கைது செய்தது. ஆனால் அவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். Wanzhou விடுவிக்கப்பட்ட சில காலத்திலேயே, சீனச் சிறையில் 1,000 நாட்களுக்கும் மேலாகக் கழித்த கனேடியர்கள் இருவரும் இறுதியாக விடுவிக்கப்பட்டனர்.

கடந்த வருடம் South Korea வின் Gyeongju நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின் போது பிரதமர் Carney, சீன அதிபர் Xi Jinping ஐ சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பிற்குப் பின்னர் சீனாவுடனான கனடாவின் உறவு ஒரு திருப்புமுனையில் இருப்பதாகக் குறிப்பிட்ட Carney, சீனாவுடன் ஒரு நடைமுறைச் சாத்தியமான ஈடுபாட்டை அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய பின்னணியில் நடைபெறவுள்ள பிரதமரின் கனேடியப் பயணம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளின் பின் கனேடியப் பிரதமர் ஒருவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக அமையவுள்ளது. 2017-க்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் சுமுகமற்ற உறவைச் சீர்செய்யும் ஒரு முக்கிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article