பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் இராணுவ மேஜரும் கொல்லப்பட்டார்.
பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் கடந்த 12 மணி நேரத்தில் அவ்ரான், குவெட்டா, கலாத் ஆகிய மாவட்டங்களில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், இராணுவ மூத்த அதிகாரி மேஜர் ரபி நவாஸ் உட்பட 29 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
முதல்கட்டத் தகவலின் படி பலூசிஸ்தான் விடுதலைப் படையினர், இராணுவ முகாம்களைக் குறிவைத்து தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.