16.5 C
Scarborough

இன்றைய ராசிபலன் – 30.06.2025

Must read

மேஷம்

நீண்ட கால கனவு நனவாகும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். ஒருசிலர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

ரிஷபம்

வெளியிடங்களில் உணவுகளை உட்கொள்ள வேண்டாம். ரசனைக் கேற்ப வரன் அமையும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும். மாணவர்கள் அடிக்கடி விடைகளை எழுதிப் பாருங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உடலில் எலும்புப் பிரச்சினை தீரும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை நிறைவேற்றி நற்பெயரைப் பெறுவர். இழந்த மரியாதையை மீண்டும் பிடித்து விடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கடகம்

குடும்பத் தலைவிகளின் தேவைகள் பூர்த்தியாகும். தங்கள் வழக்கு சாதகமாகும். மாணவர்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவர். மாணவர்கள் எதிர்பார்த்த துறையில் சேருவர். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளிடம் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். வழக்கறிஞர்கள் பிரபலமாவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

சுபச் செலவுகள் அதிகமாகும். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். விற்பனை கூடும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணமும் புகழும் இருந்தாலும் பந்தா செய்வது தங்களிடம் இல்லாத குணம். இதனாலேயே அதிக மக்கள் செல்வாக்கினை பெற்றவர் நீங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கன்னி

நல்ல வரண் அமையும். தம்பதிகளின் புரிதல் அதிகரிக்கும். மார்கெட்டிங் பிரிவினர்கள் இலக்கை எட்டுவர். புதிய முயற்சிகள் பலிக்கும். உயர்கல்வியில் நாட்டம் உண்டாகும். அதற்குண்டான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

துலாம்

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். ஆசிரியர்களுக்கு மதிப்பு கூடும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். பார்ப்பதற்கு நீங்கள் கரடுமுரடானவராகத் தெரிந்தாலும் உண்மையில் உங்களிடம் உதவிபுரியும் குணம் அதிகம்தான். இன்று பணப் பிரச்சினை இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்

எதிர்பார்த்த காரியம் சாதகமாகும். வியாபாரத்தில் வரும் போட்டிகள் குறையும். அதிக லாபம் ஈட்டுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

தனுசு

உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி மாறுவார். வேலைச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். மறைமுக அவமானங்களும் வந்து போகும். பொறுமை அவசியம். பழைய வாகனம் நல்ல விலைக்கு விற்பீர்கள். புது பங்குதாரர்களால் உற்சாகமடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மகரம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று முக்கியமான விசயமாக இருந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளளாம்.புதிய முயற்சிகள் வேண்டாம். இன்று இறைவனை பிரார்த்தித்து கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்வது தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கும்பம்

காதல் கண் சிமிட்டும். பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு வெளிமாநிலம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். பாகப்பிரிவினை நல்லபடியாக நடந்து முடியும். புகழ் பெற்ற பகுதிக்கு உங்களுடைய கடையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

கணவன் மனைவிக்குள் இருந்த பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது இருவருக்கும் நன்மை தரும். நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அவர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். வசதி, வாய்ப்புகள் பெருகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article