மேஷம்
பெண்களுக்கு வீட்டு செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் வெற்றி தரும். பண வரவு சீராக இருக்கும். நண்பரின் உதவி கிடைக்கும். வெளிநபருடன் வாதம் வேண்டாம். தேகம் பளிச்சிடும். சுறுசுறுப்பு கூடும். திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தில் வெளிநபரின் தலையீடு வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ரிஷபம்
தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மிதுனம்
வியாபாரத்திற்கு வங்கிக்கடன் கிடைக்கும். சிறு தூர பயணம் ஏற்படும். ஏஜென்ட்களுக்கு லாபம் கிடைக்கும். தம்பதிகளிடையே பிணக்கம் நீங்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பொதுத் துறையில் இருப்பவருக்கு தங்கள் சொல்லிற்கு மதிப்பு கூடும். உடல் நலம் பலப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்
கடகம்
பணத்திற்கு குறைவு ஏற்படாது. செலவு அதிகரிக்கும். சிக்கனம் தேவை. பூர்வீகச் சொத்து வந்தடையும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். பெற்றோர்களின் உடல் நலம் சிறக்கும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
சிம்மம்
பணம் பாக்கெட்டை நிரப்பும். சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும். பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிட்டும். புதிய தொழிலில் ஆர்வம் கூடும். பெண்களின் சேமிப்பு உயரும். கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கன்னி
நீண்டநாள் நிலுவையில் இருந்த வழக்கு தங்களுக்கு சாதகமாக இருக்கும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். விரதமிருந்து கோவில் சென்று வருவீர்கள். சகோதரர் உதவுவர். மாணவர்கள் நன்கு படிப்பர். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
துலாம்
தங்கள் மகள் அல்லது மகன் பற்றிய சுப காரிய நடவடிக்கைகளை துவங்குவர். வரவேண்டிய பணம் வந்து சேரும். புதிய உறவுகள் அறிமுகமாவார்கள். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிம்மதி கிடைக்கும். பிள்ளைகளால் நன்மை விளையும். வியாபாரத்தில் முதலீடுகளை பெரிய அளவில் செய்ய வேண்டாம். நட்பால் ஆதாயம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
விருச்சிகம்
வெளியூர் பயணங்கள் நன்மையைத் தரும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பிடித்த வரன் அமையும். வழக்கு சாதகமாகும். பணம் தாராளமாக வரும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
தனுசு
அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும். பழைய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு பலிக்கும். தேகம் பொலிவு பெறும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். விவசாயிகளுக்கு கேட்ட கடன் தொகை கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மகரம்
வீடு வாங்கும் முயற்சி பலிக்கும். தம்பதிகளிடையே அன்பு கூடும். உறவினர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியை நிரப்பும். பகுதி நேர வேலை கிடைக்கும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். அதற்கேற்ப லாபம் கிடைக்கும். வெளிநாட்டு பயணம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கும்பம்
உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் நட்பு பாராட்டுவர். பண வரவில் சிக்கல் இல்லை. வாகனம் ஓட்டும்போது கவனமுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கேள்விகளுக்கான விடையை நினைவில் வைக்க எழுதிப் பார்ப்பது நல்லது. திருமணம் கைகூடும். ஏற்ற துணை அமைவார்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மீனம்
வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சமையற்கலையில் ஆர்வம் கூடும். மாணவர்களின் மதிப்பெண் விகிதம் கூடும். கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். அரசியலில் ஆர்வம் மிகும். பணப் புழக்கம் மிகும். தள்ளி போன சுபகாரியம் நடந்தேறும். தம்பதிகளின் கனவு நனவாகும். அத்தியாவசிய தேவை நிறைவேறும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

