மேஷம்
செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகான்கள், வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
ரிஷபம்
பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி வரும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் திருப்பம் ஏற்படும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மிதுனம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத பயணங்கள் உண்டு. பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
கடகம்
புது பதவிகள் தேடி வரும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வர வேண்டிய பணம் கைக்கு வரும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
சிம்மம்
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். மொத்ததில் புதிய முயற்சிகள் பலிதமாகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கவலை வேண்டாம். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். உணவில் எச்சரிக்கை அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கன்னி
வேற்று இன மதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். சிலர் அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். திடீரென்று யோகம் கதவைத் தட்டும் நேரமிது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
துலாம்
தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை வெடிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
விருச்சிகம்
எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். அரசியலில் செல்வாக்கு கூடும். புது வேலை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தேக ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
தனுசு
அரசால் அனுகூலம் உண்டு. வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். தங்கள் பிள்ளைகள் தங்களின் அன்பை புரிந்து கொண்டு பொறுப்புடன் நடப்பர். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மகரம்
இன்று உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை மட்டும் இன்று பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கும்பம்
தாங்கள் விரும்பிய காரியத்தை முடிக்க தன்னம்பிக்கையும், துணிச்சலும் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வேலைச்சுமை இருக்கும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
மீனம்
தம்பதிகள் அனுசரனையாக இருப்பார்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். திடீர் பணவரவு உண்டு. வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்