13.8 C
Scarborough

இன்றைய ராசிபலன் – 26.08.2025

Must read

மேஷம்

தம்பதிகளின் கனவு நனவாகும். மருத்துவ செலவு உண்டு. உறவினர் உதவுவர். வெளியூர் பயணங்கள் நன்மையைத் தரும்.வழக்கு சாதகமாகும். விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ள மாணவர்கள் அதற்குண்டான பயிற்சியில் சேருவர். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். உடல் நலத்தில் கவனம் செலுத்தக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

ரிஷபம்

வேலைக்கு செல்பவர்களுக்கு உத்யோகத்தில் வேலை பளு குறையும். தேவையற்ற பயம் நீங்கும். இறைபக்தி கூடும். வெளியூர் பயணம் செல்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டாகும். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வியாபாரிகளுக்கு அதிக ஆர்டர்கள் பெறுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். அது தங்களுக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவிகரமாக அமையும். தங்கள் மூத்த சகோதரியால் நல்ல நன்மை உண்டு. தள்ளி போன சுபகாரியம் நடந்தேறும். பணம் தாராளமாக வரும். அத்தியாவசிய தேவை நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

கடகம்

விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தில் வெளிநபரின் தலையீடு வேண்டாம். வியாபாரத்தில் தங்கள் மனைவி ஒத்துழைப்பார். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். கலைத்துறையினருக்கு திருப்பம் ஏற்படும். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். மனைவி வீட்டாரிடம் நல்லுறவு ஏற்படும்.தம்பதிகளின் அன்யோன்யம் மிகும். நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். வெளியிடங்களில் உணவுகளை உட்கொள்ள வேண்டாம். உடல் நலத்தில் கவனம் தேவை. சுப காரியம் கைகூடும். ஆவணங்களை பத்திரப்டுத்துவீர்கள். கையிருப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கன்னி

மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். காதல் கசக்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர். கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பிடித்த வரன் அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

துலாம்

மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். குடும்பத் தலைவிகள் சிக்கனத்தை கடைபிடித்து ஒரு பகுதி பணத்தை சேமிப்பர். பெற்றோர்களின் உடல் நலம் சிறக்கும்.

உத்யோகஸ்தர்ளுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும். வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

விருச்சிகம்

பாதியில் முடங்கிக் கிடந்த கட்டிட வேலை சிறப்பாக நடக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு தங்களின் திருமண கனவு நிறைவேறும். உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். கடல் சம்பந்தப்பட்ட பொருட்களை வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு

வியாபாரத்திற்கு வங்கிக்கடன் கிடைக்கும். ஆன்மீகப் பணிகள் சிறக்கும். தீர்க்க யாத்திரை செல்வதற்கு திட்டமிடுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரண் கூடி வரும். பங்குச் சந்தைகளில் லாபம் பெறுவீர்கள். பொதுத் துறையில் இருப்பவருக்கு தங்கள் சொல்லிற்கு மதிப்புக் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

பெண்களின் சேமிப்புஉயரும். கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர். தடையாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். தங்களுக்கு அனைத்துவிதத்திலும் சுலபமாக முடியும். பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிட்டும். புதிய தொழிலில் ஆர்வம் கூடும். பணம் நாலாப்பக்கம் வரும். சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும்-

அதிர்ஷ்ட நிறம்: கிரே

கும்பம்

சதயம் நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். காரணம் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம். மேலும், தாங்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இன்று அவிட்டம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய அனைத்துவிதமான காரியங்களை துவங்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மீனம்

பெண்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். தம்பதிகளிடத்தில் நல்ல புரிதல் உண்டாகும். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் ஒரு முறைக்கு பலமுறை படித்துவிட்டு எழுதிபார்ப்பது நல்லது. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article